பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Default Image

பழனி முருகன் கோவிலில் நடிகர் சந்தானம் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் சந்தானம் தற்போது புதிதாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவர் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக வருகை தந்துள்ளார். பழனிக்கு வந்த சந்தானம் மலையடிவாரத்தில் உள்ள 3 கீலோ மீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்தார். பிறகு ரோப்கார் மூலமாக மலை மீது சென்ற முருகனை தரிசனம் செய்தார்.

Santhanam
Santhanam [Image Source : Google ]

மேலும்பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தரிசனம் முடிந்த பிறகு நடிகர் சந்தானத்திற்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது. அவர் திடீரென பழனிக்கு வந்ததற்கான காரணம் என்னவென்றால், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தான் அவர் நடித்து வரும் “வடக்குப்பட்டி ராமசாமி” படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

santhanam
santhanam [Image Source : Google ]

எனவே படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வரும் சூழலில் பக்கத்தில் தான் பழனி முருகன் கோவில் இருக்கிறது தரிசனம் செய்துவிட்டு வரலாம் என திட்டமிட்டு வருகை தந்துள்ளார். அவர் பழனி கோவிலில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Santhanam
Santhanam [Image Source : Google ]

மேலும், சமீபத்தில் பழனி முருகன் கோவில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் பல பிரபலங்களும் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்து வருகிறார்கள். கடைசியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன் உள்ளிட்ட சிலர் வருகை தந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்