அந்தகன் படத்தில் இணைந்த சமுத்திரக்கனி..!!

Next up in the film is popular actor Samuthirakani who has teamed up to play the lead role.

அந்தகன் படத்தில் அடுத்ததாக பிரபல நடிகரான சமுத்திரக்கனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .

மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். இந்த படத்தில் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கே‌எஸ் ரவிகுமார், பிக் பாஸ் வனிதா, ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அடுத்ததாக பிரபல நடிகரான சமுத்திரக்கனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.