ஊரடங்கு உத்தரவால் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் ரகுல் ப்ரீத் சிங்!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும்  நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு, தனது உதவியாளர் மூலம் உணவு அளிக்க முடிவு செய்துள்ளார். இவர் மக்களுக்கு மட்டுமல்லாது, அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள், கால்நடைகளுக்கு தொடர்ந்து உணவு அளிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.