ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் திரௌபதி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “ருத்ரதாண்டவம்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் கதாநாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிசி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடிக்கிறார்.
unknown nodeஇந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம்.இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 01-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
unknown node