ஜெயிலர்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeJailer [Image Source: Google ]
படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் என பலர் நடிக்கிறார்கள் கண்டிப்பாக இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.
தலைவர் 171
ரஜினியின் 171வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், ஒரு பக்கம் சிபி சக்கரவர்த்தி என்றும் மற்றொரு பக்கம் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தீயாக பரவியது.
unknown nodeTJ Gnanavel rajinikanth [Image Source : Twitter]
அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்றும் அந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல் பரவியது.
ரஜினி – அனிருத்
ரஜினியின் 171-வது படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் யார் என்று அது தான் அதன்படி. ரஜினியின் 171-வது திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் தற்பொழுது கலக்கி வரும் இசையமைப்பாளரான அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
unknown nodeAnirudh Ravichander And Rajinikanth [Image Source : Twitter]
இதற்கு முன்பு அனிருத் ரஜினியின் பேட்ட, தர்பார், தற்போது ஜெயிலர் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து 4-வது முறையாக அனிருத் ரஜினி படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் உள்ளனர்.
தலைவர் 170..?
ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் அவருடைய 169-வது திரைப்படம். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.