அதிர்ச்சி…பஞ்சதந்திரம் பட நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்.!

Default Image

பிரபல நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்

750-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நடிகர் கைகலா சத்யநாராயணா. இவர் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்திருந்தார். இவர் இந்த படத்தில் பேசிய “சின்ன கல்லு பெத்த லாபம்” என்கிற டயலாக் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நடிப்பது மட்டுமின்றி, இவர் படங்களை தயாரித்து, இயக்கவும் செய்திருக்கிறார்.

86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு, குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கைகலா சத்யநாராயணா இன்று காலை காலமானார். இவரது உடல் காலை 11.30 மணிக்கு பிலிம் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்