தங்கலான் படத்துடன் மோதும் ரஜினி படம்? களைகட்டப்போகும் பாக்ஸ் ஆபிஸ்!
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4, ரஜினி நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதில் லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
ஏனென்றால், லால் சலாம் திரைப்படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் சில காட்சிகள் எப்படியோ அழிந்துவிட்டது என்றும் இதனால் அந்த அழிந்த காட்சிகள் அனைத்தையும் மீட்டெடுக்க வெளிநாட்டில் இருந்து அதற்கானவர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இதனால் தான் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் கூறப்பட்டது.
கடைசி நேரத்தில் ரஜினி படத்திற்கு வந்த திடீர் சிக்கல்! தள்ளி செல்லும் ரிலீஸ் தேதி?
இந்த நிலையில், தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது, என்னவென்றால் லால் சலாம் படத்தையும், அரண்மனை 4 படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. எனவே அரண்மனை 4 திரைப்படத்தை தாமதமாக வெளியிடலாம் முதலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரஜினியின் படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டு இருந்தார்களாம்.
பிறகு அரண்மனை 4 படத்தை ஜனவரி 26 ஆம் தேதி வெளியிடலாம் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இயக்குனர் சுந்தர்சியை தொடர்பு கொண்டு கூறினார்களாம். அதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர் சுந்தர் சி அரண்மனை குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு திரைப்படம். எனவே நீங்கள் ரிலீஸ் செய்து கொடுங்கள் அப்படி இல்லை என்றால் நான் தனியாக ரிலீஸ் செய்து விடுகிறேன் என்று கூறிவிட்டாராம்.
இதனால் ரஜினியின் லால்சலாம் திரைப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வருகின்ற ஜனவரி 26-ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதே தினத்தில் தான் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படமும் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக பரவும் தகவல் இரண்டு படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இரண்டு படங்கள் அப்படி ஒரே தினத்தில் வெளியானால் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.