தலைப்புடன் ரிலீஸ் தேதி...மே மாதம் டீசர்..'சூர்யா 42′ படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக "சூர்யா 42" என்று தலைப்பு

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “சூர்யா 42” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

unknown node

Suriya 42 Team [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா 42 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

unknown node

K. E. Gnanavel Raja [Image Source : Google ]

சூர்யா 42 படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா  ”  படத்தின் அப்டேட் இன்னும் 2 வாரங்களில் வரும். அதில் தலைப்புடன் கூடிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். பிறகு மே மாதம் படத்தின் டீசர் வரும்” என கூறியுள்ளார்.

unknown node

Suriya42 Update [Image Source : Google ]

நீண்ட நாட்களாகவே சூர்யா 42 அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு தற்போது அப்டேட் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் ஏற்கனவே வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி சூர்யா 42 படத்தின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

unknown node
தலைப்புடன் ரிலீஸ் தேதி...மே மாதம் டீசர்..'சூர்யா 42′ படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.!