விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தினை பிப்ரவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா .எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தினை மே மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சக்ரா படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தினை பிப்ரவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown node