பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம்

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது.

unknown node

pichaikkaran 2 update [Image Source : Twitter]

இந்த இரண்டாவது பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தானே இயக்கி தானே நடித்து வருகிறார். படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

Pichaikkaran2 [Image Source : Google ]

படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழில் “பிச்சைக்காரன் 2” என்ற பெயரிலும், தெலுங்கில் “பிச்சகாடு 2”  என்ற பெயரிலும் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.