சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக வருகின்ற ஜூலை 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சன்டிவியில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் வெள்ளை யானை. இந்த திரைப்படத்தில், நடிகர் யோகி பாபு,சரண்யா ரவி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விவசாயத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலைக்கரணமாக தியரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக சன் தொலைக்காட்சியில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
அதன் பிறகு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது, இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown node