மீண்டும் பிரபாஸுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்..!!

It has been reported that actress Ramya Krishnan will play actor Prabhas' sister in the movie Salar.

சலார் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸூக்கு அக்காவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தினையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம், இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் பரபாஸிற்கு அக்காவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் பரபாஸிற்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் பிரபாஸுடன் நடிப்பதால் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.