ரஜினிமுருகன் பட பிரபலம் பவுன்ராஜ் காலமானார்..!

Actor Pawanraj, who starred in films including Unrepentant Youth Sangamrajinimurugan, has died of a heart attack.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில்

நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.

சினிமா பிரபலங்கள் பலர்  உயிரிழந்தது வருவது சினிமா துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். அவரை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனோவால் காலமானார், இயக்குனர் கே.வி.ஆனந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அதற்கு பிறகு நடிகர் நெல்லை சிவா மராடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர்களின் அடுத்தடுத்த மரணங்களால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்த நடிகர் மற்றும் உதவி இயக்குனருமானபவுன்ராஜ்மாரடைப்பால் காலமானார்.