நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றிப் படம்...'அயோத்தி' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்.!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளியானால் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிவிடுவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெற்றிமாறன்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளியானால் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிவிடுவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார்.

unknown node

Ayothi [Image Source : Google ]

அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் மந்திர மூர்த்தி  இயக்கத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, போஸ் வெங்கட், புகழ் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அயோத்தி’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டி ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது ” அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்” என பதிவிட்டுள்ளார்.

unknown node

rajinikanth sasikumar

அயோத்தி திரைப்படம் கடந்த வாரம் ஜீ ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் சசிகுமார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அவருடன் அவருக்கு நண்பராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.