ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு தங்களை 100% அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என்றும், சினிமா, அரசியல் என்ற இரு குதிரைகளை ஒரே நேரத்தில் ஓட்ட முயற்சிக்க கூடாது என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார்.
unknown nodeஇதுகுறித்து நகைச்சுவை நடிகர் விவேக் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:-ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கியிருப்பதற்கு எனது வாழ்த்துக்கள், இது ஜனநாயக நாடு. யாரும் அரசியலில் நுழைவதை யாராலும் தடுத்துவிட முடியாது.
unknown nodeசினிமா கலைஞர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்பதால் அரசியலில் நன்றாக பணியாற்றினால் அவர்களால் மக்களின் நல்லெண்ணத்தை எளிதில் பெற முடியும்.
ஆனால் ஒரு முறை அரசியலுக்கு வந்து விட்டால் நூறு சதவீதம் அரசியலுக்காக அர்ப்பணித்து விட வேண்டும், நான் அரசியலில் இருந்து கொண்டு சினிமாவிலும் நடிப்பேன் என்று சொல்ல முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளை ஓட்ட முடியாது. அரசியல்வாதிகள் முற்றிலும் சுயநலமற்றவர்களாகவும் மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறிய விவேக்கிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டபோது எனக்கு அதில் ஆர்வம் இல்லை, ஆனால் நான் கமல்ஹாசனின் ரசிகன். ஏற்கனவே சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த உலகத்தை பசுமைமயமாக்கும் எந்த திட்டத்திலும் எனக்கு பொறுப்புகள் தந்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்றார்.
விவேக் மேலும் கூறுகையில் கர்நாடகத்தில் காலா படத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளால் நான் வருத்தமடைந்தேன். கடந்த காலங்களில் சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக கலந்தது இல்லை. இப்போது அரசியலுடன் சினிமாவை தொடர்புபடுத்துகிறார்கள்.