சங்கி என்றால் கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா சொல்லவில்லை- ரஜினிகாந்த் விளக்கம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ” சமீபகாலமாக, ‘சங்கி’ என்ற ஒரு வார்த்தையை மக்கள் தொடர்ந்து சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் எனவும் அப்பாவை சங்கி னு சொல்லும் போது மனவேதனையும், கோவமும் வரும்.
பல கோடிகளை இழந்த நடிகை ராதிகா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன கதை!
நான் இப்போது சொல்கிறேன் அவர் சங்கி கிடையாது. அவரை தவிர யாராலும் இந்த படம் நடித்திருக்க முடியாது. அவர் சங்கியாக இருந்திருந்தால் லால்சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார்” என பேசியிருந்தார். இந்த நிலையில், சென்னையில் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா பேசியதற்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
இது குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் ” சங்கி என்றால் கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கயும் சொல்லல. அப்பா ஒரு ஆன்மீகவாதி அவர் எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என்பது தான் அவங்க பார்வை மற்றபடி லால்சலாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஐஸ்வர்யா அப்படி பேசவில்லை. லால் சலாம் நன்றாக வந்திருக்கிறது” எனவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, செந்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.