வெறித்தனமாக காத்திருந்த பிரபாஸ் ரசிகர்களுக்கு 'ராதே ஷியாம்' படத்தின் முக்கிய அறிவிப்பு.!

The promo video for the teaser of Radhe Shyam movie starring Prabhas has gone viral.

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படத்தின் டீசருக்கான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ஆதிபுருஷ் ,ராதே ஷியாம்,சலார் என சில படங்களில் கமிட்டாகியுள்ளார் .இதில் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை ராதா கிருஷ்ணா குமார் இயக்குகிறார் .இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தில் பிரபாஸ் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அதே போன்று பூஜா ஹெக்டே பிரேர்னா என்ற கேரக்டரிலும் நடிக்கிறார் .

ராதே ஷியாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது இத்தாலியில் முடித்து விட்டு தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .அதாவது ராதே ஷியாம் படத்தின் டீசருக்கான புரோமோ வீடியோவை வெளியிட்டு காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி படத்தினை குறித்த ஆச்சரிய அப்டேட்டை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர் .இது பிரபாஸ் ரசிகர்களைடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

unknown node