வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கிற்கு ஒரு கும்பிட போடு.!

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி “வெந்து தணிந்தது காடு” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா,

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி “வெந்து தணிந்தது காடு” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதுள்ள எதிர்பார்பு அதிகமாகியுள்ளது.

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இந்த படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ளது. தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று முழுவதுமாக படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் கெளதம் மேனன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். போஸ்டரில் நடிகர் சிம்பு மிரட்டலான லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார்.

unknown node
வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கிற்கு ஒரு கும்பிட போடு.!