இரண்டு பாகங்களாக வெளியாகும் புஷ்பா..??

It has been announced that the upcoming Pushpa movie starring Allu Arjun will be released in two parts.

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். தேவ ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் “படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளை மிச்சம் உள்ளன.இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. 2 பாகங்களுக்கு படத்தின் கதையை சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் இந்த முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் முதல் பாகம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node