'பொம்மை நாயகி' – பா.ரஞ்சித்துடன் இணைந்த யோகிபாபு! படப்பிடிப்பு தொடக்கம் !

The shooting of the movie 'Puppet Heroine', which will be produced by director Pa. Ranjith and starring actor Yogi Pappu, has started.

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், நடிகர் யோகி பாப்பு நடிப்பில் உருவாக்கவுள்ள பொம்மை நாயகி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளது. அப்படத்திற்கு ‘பொம்மை நாயகி’ என பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் அவர்கள் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்க உள்ளார்.

பா.ரஞ்சித் அவர்கள் இதுவரையில் மக்களின் எளிய வாழ்க்கை முறையை தான் இயக்கிய படத்தின் மூலம் வெளிக்காட்டிய நிலையில், முதல் முறையாக காமெடி படத்தை தயாரிக்க உள்ளார். இப்படம் காமெடி படம் என்றாலும், அரசியல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.