நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி படங்களை தயாரித்தும் வருகிறார். இதுவரை “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” சார்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக புது படம் ஒன்றை தயாரிக்கிறார்.
unknown nodeSKPProductionNo6 [Image Source : Twitter]
அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள 6-வது படத்திற்கான அறிவிப்பு இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 6-வது படத்தை வினோத்ராஜ் பி.எஸ் என்பவர் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு கூழாங்கல் படத்தை இயக்கி இருந்தார்.
unknown nodeஇவர் இயக்கிய இந்த முதல் படம் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு மட்டுமல்ல, ’21 இன் IFFR டைகர் விருது வென்றார். மேலும், இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் என்பவர் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு” கொட்டுக்காளி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
unknown nodeMaaveeran-Movie [Image Source: Twitter ]
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.