இயக்குனர் பா ரஞ்சித் படங்களை இயக்குவதே தவிர்த்து தனது நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் உருவாகும் சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், தற்பொழுது அவர் தயாரித்து உள்ள புது படத்திற்கான அறிவிப்பு ஒன்று போஸ்டருடன் வெளியாகி உள்ளது.
அதன்படி, ‘தாண்டகாரண்யம்’ என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தை இரண்டம் உலகபோரின் கடைசி குண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தான் இயக்குகிறார்.
இரண்டம் உலகபோரின் கடைசி குண்டு படம் போலவே இந்த திரைப்படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் படத்தின் மற்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் வைத்து தங்கலான் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node