Money Heist-ன் Prequel இந்த ஆண்டு வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் பார்க்கும் ஒரு வெப் தொடர்“மணி ஹெய்ஸ்ட்”.(Money Heist)வங்கி திருட்டை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட இந்த வெப் தொடர் 5 சீசன்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மிரட்டலான பல காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்“மணி ஹெய்ஸ்ட்” (Money Heist)-ன் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒன்றான பெர்லினை வைத்து, Prequel ஒன்றை தயாரித்துள்ளது. இந்த Prequel ‘பெர்லின்’ என்ற பெயரில் 2023 டிசம்பரில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளை கும்பலுடன் சேருவதற்குமுன், பெர்லினை வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை குறித்து சம்பவங்களை விரிவாக வைத்து 8 எபிசோடுகளாக இந்தPrequelபடமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தPrequelதொடர் வெளியாகவுள்ளது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.