தனது மகனின் விருப்பத்திற்காக பிரகாஷ் ராஜ் மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் பால சந்தர் இயக்கத்தில் வெளியான “டூயட்” படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். சிவகாசி, கில்லி,வேங்கை, சிங்கம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம்பிடித்தார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1994- ஆம் ஆண்டு நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையான நடிகை லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதன்பின், கடந்த 2010 – ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். நேற்று இருவரும் 11 ஆம் ஆண்டு திருமண நாளை மகனுடன் கொண்டாடினார்கள்.
இதனையடுத்து வேதாந்த் நான் உங்களின் திருமணத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மகனின் விருப்பத்திற்காக பிரகாஷ் ராஜ் – போனி வர்மா தம்பதி மீண்டும், திருமணம் செய்துகொண்டனர். அப்போது எடுக்க பட்ட புகைப்படங்களை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
unknown node