ஹரி & அருண் விஜய் கூட்டணியில் இணைந்த பிரகாஷ் ராஜ்..!

The film crew has announced that actor Prakash Raj will be joining actor Arun Vijay's 33rd film directed by Hari.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜயின் 33 வது திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இயக்குனர் ஹரி நடிகர் சூர்யாவை வைத்து அருவா என்ற திரைப்படத்தை இயக்கவிருந்தார். ஆனால் நடிகர் சூர்யா மிகவும் பிசியாக இருப்பதால் அந்த திரைப்படத்தை இயக்க தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இதனை தொடர்ந்து தற்போது நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.

இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார் என்று நேற்று அறிவித்திருந்தனர் . அதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

unknown node
ஹரி & அருண் விஜய் கூட்டணியில் இணைந்த பிரகாஷ் ராஜ்..!