தள்ளிப்போகும் தளபதி 65 படப்பிடிப்பு..??

Filming for thalapathy 65 is reportedly likely to be postponed due to the impact of the corona virus.

தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி செல்ல அதிக வாய்ப்புக்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பும் கடந்த 9 ஆம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது . மேலும் நேற்று படத்திற்கான ஜார்ஜியாவில் எடுக்கப்படவுள்ள காட்சிகள் எடுக்கப்பட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினார். இந்த நிலையில் அடுத்ததாக படப்பிடிப்பு சென்னையில் வைத்து படமாக்க படக்குழுவினர். திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்திற்கான படப்பிடிப்பு தள்ளி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.