ராஜ் குந்த்ராவுடனான தனது பழைய புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா..!

Popular Bollywood actress Sherlyn Chopra has released an old photo of herself with Raj Kundra, who was arrested in a pornography case.

ஆபாச பட வழக்கில் கைதான ராஜ் குந்த்ராவுடனான தனது பழைய புகைப்படத்தை பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா வெளியிட்டுள்ளார்.

ஆபாச பட வழக்கில் கைதான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியான ஷெர்லின் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலமாக ராஜ் குந்த்ராவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ராஜ் குந்த்ரா மீது ஏற்கனவே நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் அத்துமீறல் புகார் அளித்துள்ளார்.

ஷெர்லின் சோப்ரா மறுத்த போதிலும், ராஜ் குந்த்ரா இவருக்கு முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சுமார் எட்டு மணி நேரமாக ஷெர்லின் சோப்ராவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.இந்த நிலையில், ராஜ் குந்த்ராவுடன் எடுத்த ஒரு பழைய புகைப்படத்தை ஷெர்லின் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அவரது பதிவில், இந்த புகைப்படம் மார்ச் 29, 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இது ஷெர்லின் சோப்ரா செயலிக்கானது, இதனை ஆர்ம்ஸ்ப்ரைம் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நான் இதற்கு முன்பு எந்த செயலியுடனும் தொடர்பு கொண்டதில்லை. அப்போது எனக்கு ஒரு புதிய அனுபவமாகவும், நம்பிக்கை மற்றும் உற்சாகமாகவும் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

unknown node

இதற்கிடையில், ஷெர்லின் சோப்ரா, ராஜ் குந்த்ராவுக்கு ராஜ் குந்த்ரா தன்னை முத்தமிட வந்த  புகார் குறித்து தனது வாக்கு மூலத்தை பதிவு செய்ய மும்பை குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

மேலும், திருமணமான ஆணுடன்  தொடர்பு வைத்திருக்கவும் அல்லது வியாபாரத்தை தொடரவோ நான் விரும்பவில்லை என்று கூறினேன்.ராஜ் குந்த்ரா தனக்கும் தன் மனைவி ஷில்பா ஷெட்டியிக்கும் இடையேயான உறவு சிக்கலானது ,நான் வீட்டில் அதிக நேரம் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பேன் என்று கூறினார்.கடந்த மாதம், ஷெர்லின் சோப்ரா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது .