கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் மக்களின் பேரதராடுவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
unknown nodePonniyinSelvan By End Of Week-4 [Image Source: Twitter ]
இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.
unknown nodePonniyin Selvan ON Amazon Prime [Image Source: Twitter ]
இந்த நிலையில். பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று பிரபல ஓடிடி தலமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது. ஆனால், வழக்கமாக அமேசான் பிரேமில் கணக்கு (Account) வைத்திருப்பவர்கள் இந்த படத்தை பார்க்கமுடியாது. அப்படி பார்க்கவேண்டும் என்றால் 199.ரூபாய் பணத்தை செலுத்தி மட்டுமே பார்க்கமுடியும்.
இதையும் படியுங்களேன்-ரிலீசுக்கு முன் முரட்டு வியாபாரம்.! மிரண்டு போய் இருக்கும் கோலிவுட்..! விஜயின் “வாரிசு” வேட்டை ஆரம்பம்….
unknown nodePonniyin Selvan ON Amazon Prime [Image Source: Twitter ]
மேலும், அமேசான் பிரேமில் கணக்கு (Account) வைத்திருப்பவர்கள் பார்க்கவேண்டும் என்றால், வரும் நவம்பர் மாதம் வரை காத்திருக்கவேண்டும். விரைவில் அதற்கான ரிலீஸ் தேதியும் அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.