பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

unknown node

Ponniyin Selvan [Image Source: Twitter ]

படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

unknown node

PonniyinSelvan2 [Image Source: Twitter ]

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து  இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நேற்று பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

Ponniyin Selvan Part 2 New Update[Image Source : Twitter]

அதன்படி, தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா ட்வீட்டர் பக்கத்தில் மோஷன் போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது.

unknown node
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...