கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
unknown nodeponniyin selvan 2 First Single Coming Soon [Image Source : Twitter]
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா கடந்த சில நாட்களுக்கு முன்பு குந்தவையின் வீடியோவை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள்.
unknown nodeஅதனை தொடர்ந்து தற்போது ‘அகநக’ என தொடங்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வரும் மார்ச் 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக குந்தவை மற்றும் வந்தியத்தேவன் இருக்கும் போஸ்ட்டரை வெளியீட்டு படக்குழு அறிவித்துள்ளது.
unknown nodePonniyinSelvan2 Grand Audio & Trailer Launch [Image Source : Google ]
மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 4- ஆம் தேதி நேரு மைதானத்தில் வைத்து மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.