பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70 % விகிதம் முடிவைத்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்ததிரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகிறது என லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

unknown nodeunknown node

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். படத்திற்க்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.