சொந்த ஊருக்கு சென்ற சிவகார்த்திகேயன் ..! வைரலாகும் புகைப்படங்கள்.!

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து தற்போது டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் அயலான் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மேலும் பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

குறிப்பாக இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாக இருக்கும் SK 20 படத்தில் இணைகிறார். காரைக்குடி, பாண்டிச்சேரி பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

unknown node

இதற்கிடையில், திருவீழிமிழலை, திருநள்ளாறுக்கு சென்றுள்ளார். இதில் திருவீழிமிழலை சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் ஆகும். திருவீழிமிழலைக்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்குள்ள பள்ளிக்கு சென்று மாணவர்களையும், மக்களையும் சந்தித்தார். பின் சந்நீஸ்வர பகவான் கோவிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார்.இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node