தடுப்பூசி போட்டுக் கொண்டாரா நயன்தாரா..? சர்ச்சையாகும் புகைப்படம்..!!

The controversy arose because the photo of Nayantara being vaccinated looked like she was injecting with bare hands without a needle.

நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தில் ஊசி இல்லாமல் வெரும் கையில் ஊசி போடுவது போல் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று காலை  தடுப்பூசி எடுத்துக் செலுத்திக்கொண்டனர் அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

unknown node

இந்த நிலையில், அந்த புகைப்படத்தில் நயன்தாராவிற்கு தடுப்பூசி செலுத்தும் போது நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் அந்த புகைப்படம் தற்போது சர்ச்சையாகி வருகிறது. இதனால் உண்மையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா என்று பல தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்துள்ளது.