கெளதம் கார்த்தி ரசிகர்களுக்கு வெளியான செல்லப்பிள்ளை மோஷன் போஸ்டர்..!!

The motion poster for the movie 'Cellappillai' starring actor Gautam Karthik has been released

நடிகர் கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ளார் செல்லப்பிள்ளை என்ற  திரைப் படத்திற்கான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது நடிகர் சிம்புவுடன் பத்து தல என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் அடுத்ததாக  நடிக்கும் படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், நடிகர் கெளதம் கார்த்திக்கின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அருண் சிதம்பரம் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு செல்லப்பிள்ளை என்று டைட்டில் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகை கீர்த்தி சுரேஷ் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த மோஷன் போஸ்டர்.

unknown node