மக்கள் செல்வனின் "துக்ளக் தர்பார்" எப்போது வெளியாகிறது தெரியுமா...?

Vijay Sethupathi starrer Tughlaq Darbar is all set to hit theaters on April 12.

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தை ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்

நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று துக்ளக் தர்பார்.இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்ததுக்ளக் தர்பார்திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.