ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருகவைக்கும் 'பத்து தல' படத்தின் இரண்டாவது பாடல் இதோ.!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  "பத்து தல" இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “பத்து தல” இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், டீ ஜே, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

PathuThala [Image Source : Google ]

இந்த திரைப்படத்தை ஸ்டூயோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

unknown node

Ninaivirukka [Image Source : Twitter]

இந்த பாடலை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான “நினைவிருக்கா” என தொடங்கும் சூப்பரான மெலடி பாடல் இன்று (மார்ச் 13) மாலை வெளியாகும்  வெளியாகும் என முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியீட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

அந்த அறிவிப்பின் படி, தற்போது பத்து தல படத்தின் இரண்டாவது பாடலான  “நினைவிருக்கா”  பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த பாடலை அவருடைய மகன் ஏ ஆர் அமீன் பாடியுள்ளார். இந்த பாடலை எழுத்தாளர் கபிலன் எழுதியுள்ளார். மேலும் பத்து தல படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.