பதான் வெற்றியால் சமந்தாவிற்கு வந்த பெரிய சோதனை.! சோகத்தில் ரசிகர்கள்.!

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் திரைப்படம் திரையரங்குகளில்

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

Pathan Box Office[Image Source : Twitter]

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியால் ஷாருக்கான் ரசிகர்கள் வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம் ஆனால், சமந்தா ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கிறார்களாம். ஏனென்றால், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது.

unknown node

Shaakuntalam [Image Source: Twitter ]

ஆனால், தற்போது பதான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் சமந்தாவின் ‘சாகுந்தலம்’ தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பதான் படம் வெற்றியால் ஹிந்தியில் ஷெஹ்சாதா படம் பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

unknown node

Shaakuntalam[Image Source : Google]

எனவே, இந்த ஷெஹ்சாதா படம் வெளியானால் சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது, ஏற்கனவே பதான் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது எனவே, ‘சாகுந்தலம்’ திரைப்படம் தள்ளி வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சமந்தா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.