கேஜிஎப் திரைப்படத்தின் வசூல் சாதனையை ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் முறியடித்துள்ளது.
பதான் வசூல் :
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வசூலில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது என்றே கூறலாம். விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தினம் தினம் அறிவித்து வருகிறது.
unknown nodeஅந்த வகையில், தற்போது படம் வெளியான 15 நாட்களில் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை அறிவித்துள்ளது. அதன்படி, பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 877 கோடிகள் வசூல் செய்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 452 கோடிகள் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஜிஎப் வசூலை முறியடித்த பதான்
unknown nodeKgf Pathan [Image Source : Twitter]
இந்தியாவில் மட்டும் பதான் திரைப்படம் 452 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இதற்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற கேஜிஎப் சாதனையை முறியடித்துள்ளது. கேஜிஎப் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 432 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், பதான் படம் இந்தியாவில் 452 கோடி வசூல் செய்து கேஜிஎப் சாதனையை முறியடித்துள்ளது.
பதான்
unknown nodePathan Box Office[Image Source : Twitter]
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஷாருக்கான், தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பதான்”. யக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா, விஷால்-சேகர் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.