நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
unknown nodePathan Box Office[Image Source : Twitter]
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
unknown nodeபதான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதன்படி, படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 593 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பதான் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
unknown nodeஇந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான்,தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான் ஜான் ஆபிரகாமை முத்தமிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஷாருக்கான் ஜான் ஆபிரகாமிற்கு முத்தம் கொடுத்ததற்கு ஜான் ஆபிரகாம் சிரித்துக்கொண்டே, “முதல் தடவை…நான் வெட்கப்படுகிறேன் என தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கிற்கு ‘கிட்டத்தட்ட முத்தமிட்டேன்’ என்று நகைச்சுவையாக கூறினார்.