பட்டையை கிளப்பும் ‘பதான்’… மிரள வைக்கும் வசூல்.! 4 நாட்களில் இத்தனை கோடிகளா..?

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் “பதான்”. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

அதிரடி ஆக்‌ஷன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், கண்டிப்பாக படத்தை திரையரங்கில் பார்க்கவேண்டும் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 4 நாட்களை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற விவரத்தை பார்க்கலாம் அதன்படி இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிந்தி திரை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாளைக்கு படம் 100 கோடி வசூல் செய்து வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை ஆனால் பதான்  திரைப்படம் இதனை சுலபமாக செய்து வருவது பெரிய சாதனை என்றே கூறலாம். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.