சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை–3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் மிகவும் த்ரில்லாக இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுந்தர் சி முன்றாவது பாகத்தையும் இயக்கியுள்ளார்.
unknown nodeஇந்த மூன்றாம் பாகத்தில் ஆர்யா, சுந்தர் சி, சாக்ஷி அகர்வால், ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். திகில் நிறைந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார்.
unknown nodeபடத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவெற்பை பெற்று வருகிறது. விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
unknown node