எம்மாடி என்னா அடி! வில்லன் நடிகருக்கு ‘பளார்’! இப்படி கூட பாராட்ட தெரிவிக்கலாமோ?
லவ் ரெட்டி படத்தின் க்ளைமாக்ஸைப் பார்த்துவிட்டு படத்தில் வில்லத்தனமான நடிப்பில் என்.டி.ராமசாமி நிஜமான வில்லன் போல நடித்து இருந்ததால் பெண் ஒருவர் அவரை தாக்கினார்.
ஹைதராபாத் : தெலுங்கில் வெளியான லவ் ரெட்டி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமசாமியை பெண் ஒருவர் அறைந்து தாக்கினார். படத்தை ரசிகர்களுடன் பார்ப்பதற்காக இன்று என்.டி.ராமசாமி மற்றும் படத்தில் நடித்திருந்த ஷ்ரவாணி கிருஷ்ணவேணி, அஞ்சன் ராம்சேந்திரா ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார்கள்.
அப்போது படத்தில் வில்லத்தனமான நடிப்பில் புகுந்து விளையாடி இருந்த என்.டி.ராமசாமி நடிப்பைப் பார்த்து திரையரங்குகளில் இருந்த அனைவரும் கை தட்டி பாராட்டினார்கள். அப்போது பெண் ஒருவர் வேகமாக அவரை நோக்கி ஓடி வந்தார்.
பலரும் அவரை பிடித்து அவருடைய நடிப்புக்குப் பாராட்டுகளைக் கொடுப்பார் என நினைத்த நிலையில், நடிகரின் கன்னத்தில் பளார் பளார் என அடிக்க தொடங்கினார். என்ன நடக்கிறது இங்கு என ஒன்றும் புரியாமல் அந்த நடிகரும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அந்த பெண்ணை அதிர்ச்சியாகப் பார்த்தார்.
#LoveReddy చిత్ర నటుడిపై ప్రేక్షకురాలి దాడి..
హైదరాబాద్ నిజాంపేట జీపీఆర్ మాల్ లో ఘటనసినిమా క్లైమాక్స్ చూసి ఎమోషనల్ అయిన ఒక ప్రేక్షకురాలు థియేటర్స్ విజిట్ కు వెళ్లిన చిత్రబృందంలోని తండ్రి పాత్రను పోషించిన ఎన్ టీ రామస్వామి అనే నటుడు నిజంగానే ఆ ప్రేమజంటను విడిదీశాడని కోపంతో తిడుతూ… pic.twitter.com/FY9uuXTUlC
— Ramesh Pammy (@rameshpammy) October 24, 2024
அங்கிருந்தவர்கள் வேகமாக அந்த பெண்ணை பிடித்துக் கொண்டு இது வெறும் படம் அவர் அப்படி இல்லை… அவரை அடிக்காதீர்கள் என்பது போலக் கூறினார்கள். ஆனாலும், அந்த பெண் ஆத்திரம் தீராத காரணத்தால் மீண்டும் நடிகரைத் தாக்கச் சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் படத்தில் வரும் கதையை விட இந்த கதை அருமையாக இருக்கிறது.
இது படத்தினை ப்ரோமோஷன் செய்வதற்காக எழுதப்பட்ட ஒரு கதை என்பது வீடியோவை பார்த்தாலே தெரிகிறது எனக் கூறிவருகிறார்கள். மேலும், சிலர் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் அந்த மாதிரி வெறுப்பேற்றும் வகையில் நடித்துள்ளார். அதனை இந்த வடிவில் அவருக்குப் பாராட்டு வந்திருக்கிறது எனவும் கூறி வருகிறார்கள்.