ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் பல திரைப்படங்கள் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இன்று (10.3.2023) 3 சூப்பர் தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த 3 திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள். அது என்னென்ன படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம்.
1.டாடா
unknown nodeDaDa on Amazon prime [Image Source : Twitter]
இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டாடா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. இந்த படம் இன்று அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
2.ரன் பேபி ரன்
unknown nodeRunBabyRun [Image Source : Twitter]
இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியான த்ரில்லர் திரைப்படம் “ரன் பேபி ரன்”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. இந்த திரைப்படமும் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
3.பொம்மை நாயகி
unknown nodebommainayagi [Image Source : Twitter]
இயக்குனர் சான் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பொம்மை நாயகி”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது என்றே கூறலாம். இந்த திரைப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.