ஐயோ ரொம்ப க்யூட்…மகனின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்.!

Default Image

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020-ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நீலு எனும் அழகான ஆண் குழந்தை இருக்கிறது. அடிக்கடி காஜல் அகர்வாலும் தன்னுடைய குழந்தையின் புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் தனது மகன் நீலு-வின் முக்கால் வயது பிறந்த நாளை கொண்டாடி பாசத்துடன் தனது மகனை தூக்கி கொஞ்சும் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை வெளியீட்டு ” கடவுள் உங்கள் மூலம் செய்யும் எல்லா காரியங்களையும் பார்க்க என்னால் காத்திருக்க முடியாது. இதற்கிடையில், கடந்த 9 மாதங்களுக்கும் வரவிருக்கும் ஆண்டுகளுக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். 3/4 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அன்பான பையன்” என காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்