இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆனதை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள்.
unknown nodeNayan – Vikki [Image Source : Google ]
2 குழந்தைகளைப் பெற்று கொண்டதை விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு காமிக்கவே இல்லை. பெயர்கள் என்னவென்றும் கூறாமல் இருந்தனர். இதனையடுத்து, சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா முதல்முறையாக குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ள்ளார்.
unknown nodeNayanthara [Image Source : Google]
‘உயிர் ருத்ரோனில் என் சிவன்’ (Uyir Rudronil N Shivan), ‘உலக் தைவிக் என் சிவன்'(Ulag Dhaiveg N Shivan) ஆகியவை தான் அந்தப் பெயர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இவ்வளவு பெரிய பெயரா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeNayanthara Vignesh Shivan[Image Source: Twitter ]
விரைவில் நயன்தாரா தன்னுடைய குழந்தைகள் முகம் தெரியும் படி புகைப்படங்களை வெளியீடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,நடிகை நயன்தாரா தற்போது இறைவன், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.