அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Actor Bahadur Basu to play villain Allu Arjun in Pushpa movie

புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளார். செம்மரக்கடத்தல் விவகாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் மரத்தை வெட்டுபவராக அல்லு அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து தற்போது படத்தில் வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக படக்குழுவினர் தற்போது அறிவித் துள்ளனர். இதனால் தற்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node