விஷால் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்... 31 வது படத்திற்கான அறிவிப்பு.!!

The official announcement for actor Vishal's 31st film has now been released

நடிகர் விஷாலின் 31 வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுமட்டுமில்லாமல் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலின் 31 வது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆம், விஷாலின் 31 வது படத்தை இயக்குனர் பா சரவணன் இயக்கவுள்ளதாகவும் படத்திற்கு இசையைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தையும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node