நம்பர் 1... விஜய் தான்.! '250' கோடி வசூலை அள்ளிய 'வாரிசு'.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'வாரிசு ' திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘வாரிசு ‘ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வசூல் ரீதியாக படம் வெளியான 1 வாரத்தில் 210 கோடிகள் வசூல் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தை தமிழகத்தில் வாங்கி வெளியிட்ட 7 ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

unknown node

தமிழகத்தில் மட்டும் 123 கோடியும், கேரளாவில் 12 கோடியும், கர்நாடகாவில் 13 கோடியும், வெளிநாட்டில் 80 கோடி வரை என ஒட்டுமொத்தமாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான வாரிசு படம் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் நம்பர் 1 விஜய் தான் எனவும், #MrNumberOneVIJAY என்ற ஹஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், வாரிசு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளதால் படக்குழுவுடன் நேற்று சென்னையில் நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.