புஷ்பா 3 திரைப்படம் விரைவில் உருவாகவுள்ளதாக சூப்பரான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புஷ்பா
unknown nodeநடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் என்பவர் இயக்கி இருந்தார்.
புஷ்பா 2
புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்கள்.
unknown nodepushpa 2 NEW UPDATE [Image Source : Twitter]
சமீபத்தில் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு கூட மிரட்டலான வீடியோ ஒன்றை படக்குழு வெளியீட்டு இருந்தது. போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா 3..?
புஷ்பா 2 திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது புஷ்பா 3 படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புஷ்பா 3 படத்தின் கதையை இயக்குனர் அல்லு அர்ஜுனிடம் கூறிவிட்டதாகவும் அது அவருக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
unknown nodeஅது மட்டுமின்றி, படத்திற்கு “புஷ்பா 3: தி ரூல் பிகின்ஸ்” எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பார்த்த பலரும் வெயிட்டிங்…புஷ்பா 3 ஆன் கார்ட்ஸ் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள், இது வெறும் வதந்தியா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தால் மட்டுமே தெரிய வரும் என கூறப்படுகிறது.
மேலும், புஷ்பா 2 படத்தின் புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது. அல்லு அர்ஜூன் ராஷ்மிகாவுடன் ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ், ஜெகதீஷ் என பல பிரபலங்கள் இந்த படத்தில் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.