லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
லியோ :
unknown nodeLEO NEW UPDATE [Image Source : Twitter]
நடிகர் விஜய் தற்போயது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா :
unknown nodeleo [Image Source : Twitter]
லியோ படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்திற்கான இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கொடுத்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் ” லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நிகழ்ச்சியை நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி :
இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறாது என்பதால் பல ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா அனைத்துமே சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் தான் நடைபெறும்.
unknown nodeLEO VIJAY [Image Source : Twitter]
ஆனால், இந்த முறை திருச்சி, கோவை, மதுரைபகுதிகளில் நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளதால் அங்கு இருக்கும் விஜய் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் இசை வெளியீட்டு விழாவிற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.